இ-பாஸ் இல்லாததால் ஆட்டோ பறிமுதல்: விரக்தியில் ஓட்டுநர் திடீர் தீக்குளிப்பு

ஹரி
ஹரி
Updated on
1 min read

காஞ்சி மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்தஓட்டுநர் திடீரென தீக்குளித்துதற்கொலைக்கு முயன்றார்.

தாம்பரம் அருகே படப்பை ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் ஹரி (42). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று காலை தனது ஆட்டோவில் தாம்பரத்துக்கு சவாரிவந்தார். காந்தி சாலை-முடிச்சூர் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, வாகன சோதனையில் இருந்த தாம்பரம் போக்குவரத்து போலீஸார், ஆட்டோவை நிறுத்தினர். பின்னர் பயணியிடமும், ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரித்தனர்.

விசாரணையில் காஞ்சி மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆட்டோவந்தது தெரிய வந்த தால் போலீஸார் இ-பாஸ் கேட்டுள்ளனர். ஆனால், ஆட்டோவுக்கு இ-பாஸ் இல்லை. எனவே போலீஸார் அபராதம் விதித்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதனால், ஆத்திரமடைந்த ஹரி ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி திடீரென தீ வைத்துக் கொண்டார். போலீஸார் உடனே தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஹரி சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in