வேலூரில் கரோனா சிகிச்சைக்கு அமெரிக்க மருந்து
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள மருந்தை பயன்படுத்தவுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் டோசிலிசுமாப் (TOCILIZUMAB) மருந்து பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று தமிழகஅரசு அமைத்துள்ள மருத்துவக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் டோசிலிசுமாப் மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 300 டோசிலிசுமாப்மருந்து பாட்டில்கள் வந்துள்ளன.சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசுமருத்துவமனைகளில் இந்த மருந்து பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வேலூரில் கரோனாபாதிப்பு அதிகமாக இருப்பதால்வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு 10 மருந்துபாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘‘ஒரு டோஸ் மருந்தின் விலைரூ.75 ஆயிரம்’’ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
