

நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் பள்ளிவிளை சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜரின் மார்பளவு சிலை உள்ளது. இச்சிலையின் முகப்பகுதி இன்று உடைந்து சேதமாகி இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸார் சிலை முன்பு திரண்டனர். கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் தலைமையில் சிலையை சேதப்படுத்திய நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட திரளோனார் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.
பின்னர் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்.
நாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.