Published : 02 Jul 2020 08:09 AM
Last Updated : 02 Jul 2020 08:09 AM

உதயநிதி இ-பாஸ் பெற்றதாக கூறுவது மோசடி: அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்க திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி சென்றிருந்தார். அவர் இ-பாஸ் பெறாமல் செல்லலாமா என அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு தனது ட்விட்டரில் பதில் அளித்திருந்த உதயநிதி, "மெயின் ரோடு செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீஸாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டிய பிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசு பொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்
துக்கொள்ள வேண்டியுள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது:

திமுக தலைவரின் மகன் என்பதற்காக சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாமா, சட்டம் அனைவருக்கும் சமம். இ-பாஸ் பெற
தூத்துக்குடி ஆட்சியர் இசைவு தரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாம் சென்றார் என்றுதான் பொருள்.
வாங்கியிருந்தால், அதை காட்டியிருக்கலாம். இது மோசடி வேலையாக இருக்கும்"என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x