

நீலகிரி மாவட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் (திமுக) பா.மு.முபாரக் தலைமையில், உதகையிலுள்ள நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலையான சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு சென்ற கோவில்பட்டி நீதித் துறை நடுவரை அவமதித்து ஒருமையில் பேசியதற்காக, நீதி
மன்ற கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்ட ஒருவரை நீலகிரி மாவட்டத்துக்கு நியமித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஏடிஎஸ்பி குமாரின் நியமனத்தை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும், தந்தை-மகன் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் உட்பட தொடர்புடைய காவல் துறையினர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.