

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு, டிஜிபிஜே.கே.திரிபாதி அஞ்சலி செலுத்தினார்.
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து வந்தவர் மணிமாறன் (57). இவருக்கு கடந்த மாதம் 11-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்ட மணிமாறன் உருவப் படத்துக்கு தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
போலீஸார் அதிர்ச்சி
சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி ஏற்கெனவே, கரோனா வைரஸ்தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது காவல் உதவிஆய்வாளர் ஒருவரும் இறந்திருப்பது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.