

இந்திய பொறியாளர்கள் கழகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்பில் புதுமை காணுதல் விருதை திருச்சி பெல் நிறுவனம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் பாதுகாப்பில் பல்வேறு புதுமையான முறைகளைக் கையாளுதல், பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்காணித்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கழகத்தின் தலைவர் எல்.வி.முரளி கிருஷ்ண ரெட்டி முன்னிலையில், டெல்லி சிபிடபிள்யுடி இயக்குநர் ஜெனரல் திவாகர் கார்க் திருச்சி பெல் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் பொது மேலாளர் டி.பாஸ்கரனிடம் விருதை வழங்கிப் பாராட்டினார்.
இந்த விருதுக்காக முதல் முறையாகப் பங்கேற்ற திருச்சி பெல் நிறுவனம் இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.