Last Updated : 01 Jul, 2020 05:47 PM

 

Published : 01 Jul 2020 05:47 PM
Last Updated : 01 Jul 2020 05:47 PM

கேரளாவில் நாளை நடைபெறும் ஏலக்காய் ஏலத்தில் தமிழக உற்பத்தியாளர்கள் 40 பேருக்கு அனுமதி

கேரள மாநிலம் புத்தாடியில் நாளை (ஜூலை 2) நடைபெறும் மின்னணு ஏலக்காய் ஏலத்தில் தமிழக ஏலக்காய் உற்பத்தியாளர்கள் 40 பேர் பங்கேற்க இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடுக்கி மாவட்ட பாரம்பரிய ஏலக்காய் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டி.வி.ராமகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எங்கள் நிறுவனத்தில் 250 பாரம்பரிய ஏலக்காய் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களில் 98 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மத்திய நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கேரள மாநிலம் புத்தாடியிலும், தேனி போடியிலும் மின்னணு ஏலக்காய் ஏலம் நடைபெறும்.

தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரள மாநிலம் புத்தாடியில் நடைபெறும் ஏலத்தில் தமிழக உற்பத்தியாளர்கள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. எனவே கரோனா சரியாகும் வரை போடியில் நடைபெறும் மின்னணு ஏலத்தில் எங்களுக்கு வாய்ப்பு வழங்க கோரினோம். அதன்படி ஜூன் மாதம் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஜூலை மாதமும் போடியில் நடைபெறும் ஏலத்தில் எங்கள் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்க கோரி மனு அனுப்பினோம். அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து கரோனா ஊரடங்கு நீக்கப்பட்டு நிலையை சரியாகும் வரை போடியில் நடைபெறும் மின்னனு ஏலக்காய் ஏலத்தில் எங்கள் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்ததது.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய நறுமண வாரியம் சார்பில் கேரள மாநிலம் புத்தாடியில் நாளை (ஜூலை 2) மற்றும் 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஏலக்காய் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜாகார்த்திக்கேயன், புத்தடியில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க மனுதாரர் நிறுவனம் சார்பில் 50 ஏல உற்பத்தியாளர்களுக்கு இ-பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து கேரளாவில் நாளை நடைபெறும் மின்னணு ஏலக்காய் ஏலத்தில் தமிழக ஏலக்காய் உற்பத்தியாளர்கள் 40 பேர் பங்கேற்க இ-பாஸ் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x