நெல்லையில் ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி

நெல்லையில் ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 782 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 20 பேர், அம்பாசமுத்திரத்தில் 8, சேரன்மகாதேவிில் 3, களக்காட்டில் 3, மானூரில் 4, பாளையங்கோட்டை தாலுகா பகுதிகளில் 6 என்று மொத்தம் 44 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாநகரில் கடந்த ஒரு வாரமாகவே கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் உள்ளது.

இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசுத்துறைகள், தனியார்துறைகளில் பணியாற்றுவோர், வியாபார தலங்களில் உள்ளவர்கள், கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோர் என்று பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

பரவலான இந்த பாதிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in