கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு உயரதிகாரிகள் இடையே பரவும் கரோனா

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு உயரதிகாரிகள் இடையே கரோனா தொற்று பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்றைய (ஜூன் 30) நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உள்ளது. இதில் தற்போது 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 484 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கு கரோனா தொற்று பரவிவருவதால் அரசு பணியாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதாவுக்கு நேற்று (ஜூன் 29) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அதேபோல், கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திற்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கள்ளக்குறிச்சி நில எடுப்பு தனி வட்டாட்சியர் சையத் காதருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தொற்றுக்குள்ளாகி கோவை தனியார் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து கிருமி நாசினி 3 நாட்களாக தெளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளிடையே கரோனா தொற்று பரவி வருவதால், அரசு துறை அதிகாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in