கரோனா தடுப்பு பணிக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.3.82 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள்

குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் மற்றும் காவேரி கல்வி நிறுவனங்கள் சார்பில் ரோட்டரி அறக்கட்டளைக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர்  ஏ.கே.நடேசன், துணைத் தலைவர் டாக்டர் மதன்கார்த்திக், நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன் ஆகியோர் ரோட்டரி அறக்கட்டளைக்கான காசோலையை அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கினர்.

Updated on
1 min read

குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள், காவேரி கல்வி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு ரோட்டரி மாவட்டம் - 2982, பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை ஆகியவை சார்பில் கரோனா தடுப்பு நிவாரண பணிக்கு ரூ.3.82 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பெஞ்சு - டெஸ்குகள் வழங்கப்பட்டன.

எக்ஸல் கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஏ.கே. நடேசன் தலைமை வகித்தார். விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி. தங்கமணி, கே.சி.கருப்பணன், வெ. சரோஜா ஆகியோர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பெஞ்சு - டெஸ்குகளை வழங்கினர்.

மேலும், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் சார்பில் ரூ.1 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை ரோட்டரி அறக்கட்டளைக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன், துணை தலைவர் டாக்டர் மதன்கார்த்திக், நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன் ஆகியோர் வழங்கினர்.

மாவட்ட ஆட்சியர் மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட ஆளுநர்கள் வெங்கடேசன், சுந்தரலிங்கம், சரவணன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாக செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொதுச்செயலாளர் சிவசுந்தரம், மாவட்ட அறக்கட்டளை தலைவர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in