

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 5,400-ஐ தாண்டியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 5,259 ஆக இருந்தது. நேற்று 160 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே,மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5, 419 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,661 பேர் குணமடைந்துள்ளனர்; 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,887 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 90 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு 1,977 ஆக உயர்ந்துள்ளது. இதில், 808 பேர் குணமடைந்தனர்; 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 3,677 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் உட்பட புதிதாக 153 பேருக்குபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்,இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,830 ஆக அதிகரித்துள்ளது. இதில், 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 1,803 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று செய்யாறுகாவல் நிலையத்தில் ஒருவர் உட்பட மேலும் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,819 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 99 பேர் பாதிக்கப்பட்டதால் இங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,480ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 53 பேருக்கு நேற்று ஒரேநாளில் தொற்று ஏற்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 827 ஆகவும் அதிகரித்துள்ளது.