

வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடிக்கச் செல்லும் பொதுமக்களை தடுத்த தங்கராஜ் என்பவரை தாக்கிய கள்ளச்சாராய கும்பலை விரட்டச் சென்ற பொதுமக்களை மிரட்டும் வகையில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
இது தொடர்பாக வேலூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஏற்கெனவே 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வெல்லக்கல் மலை கிராமத்தைச் சேர்ந்த குமார்(41), செல்வம்(36), விஜி(36) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.