

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் உள்ள நளினி, அவரது கணவர் முருகனை சந்தித்துப் பேசஅனுமதிக்கக் கோரி நளினியின் தாயார் பத்மா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சிறைத் துறை அதிகாரிகள் கடந்த 3 மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச அனுமதிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் நளினியும், முருகனும் சிறைக்குள் 30 நிமிடம் வீடியோ கால் மூலமாக பேச அனுமதிக்கப்பட்டதாகவும், இதனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.