

மதிமுகவின் கரூர் மாவட்டச் செயலாளராக பரணி கே.மணி செயல்பட்டு வந்தார். அவர் கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருவதால் அவர் அடிப்படை உறுப் பினர் உட்பட அனைத்து பொறுப்பு களிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப் பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மதிமுகவிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக் கம் சோமு, சேலம் மாவட்ட மதிமுக செயலாளர்தாமரைக்கண்ணன், துணை செயலாளர்கள் ராஜேந் திரன், ஆனந்தி கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயவேல், மாநில மகளி ரணி செயலாளர் குமரி விஜயகுமாரி ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டச் செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.