

தொழில் துறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. முத லீட்டாளர்கள் யாரும் வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை என அமைச்சர் தங்கமணி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசிய தாவது:
எதிர்க்கட்சிகள் எல்லாம், எப்படியாவது தமிழகத்துக்கு புதிய தொழில்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வரு கின்றனர். தமிழகத்தில் இருந்து முத லீட்டாளர்கள் வெளிமாநிலங் களுக்கு சென்றுவிட்டதாக கூறி வருகின்றனர். அப்படி எந்த முதலீட்டாளரும் வெளி மாநிலத்துக்கு செல்லவில்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதால், இங்கு முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஆர்வத் துடன் வருகின்றனர். அவர் களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 9, 10-ம் தேதிகளில் சிறப்பாக நடக்கவுள்ளது. ஆட்டோ மொபைல், ஜவுளி, தோல், சுற்றுலா, மருத்துவம், காற்றாலை மின்உற்பத்தி சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு சான்றாகவே இந்திய அரசு அறிவித்த 24 விருது களில் மூன்றில் ஒரு பங்கை வென்று, 36 மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 33 ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.31,706 கோடிக்கு தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 17 நிறுவனங்கள் தங்களது கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதுவரை 12 மாவட்டங்களில் 20 தொழிற்பூங்காக்கள், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 4 லட்சம் டன் உற்பத்தியுடன், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டிப்பட்டி கிராமத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 2 லட்சம் திறன் கொண்ட மேற்பூச்சு செய்யப்பட்ட அடுக்கு காகித அட்டை தயாரிக்கும் ஆலைக்கான பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பருக்குள் இந்த ஆலையை முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார்.
ஆலங்குளம் சிமென்ட் ஆலை 30 ஆண்டுகாலமாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. இப்போது ரூ.2.70 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டில், ரூ.8 கோடி லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா சிமென்ட் திட்டத்தின்மூலம் 6,72,466 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 2,06,755 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை 6,682 டன் ‘அம்மா’ உப்பு விற்பனையாகியுள்ளது. இதை, வெளிமாநிலங்களுக்கும் விரிவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.