வருவாய்த் துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்: தடையங்கள் சேகரிப்பு

ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன்
ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன்
Updated on
1 min read

உயர் நீதிமன்றம் உத்தரவு படி சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் வந்தது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, 24 மணி நேரமும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி செய்யும் விதமாக சமூக பாதுகாப்புத் துறை தனி வட்டாட்சியர் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ஆகியோரை நியமித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் காவல் நிலையம் வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே நீதித்துறை நடுவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி ) குமார் மற்றும் சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் நீதித்துறை நடுவரை அவமரியாதையாக பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காவலர் மகாராஜன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in