

தமிழகத்தில் உள்ள 233 எம்எல்ஏக் களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து சட்டப்பேரவை தீர்மானத்தை நிறை வேற்ற முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் பன்னாட்டுக்குழு நடத்திய விசா ரணை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இலங்கையில் திட்டமிட்டே மனித உரிமை மீறல் கள் அரங்கேற்றப்பட்டன என் பதை விசாரணை அறிக்கை தெள்ளத்தெளிவாக நிரூபித்திருக் கிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. இன்னொரு புறம் உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இதைத் தடுக்க இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இந்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 233 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்து அதன்மீது நட வடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித் துள்ளார்.