

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, தேனி ஆவின் பெருந்தலைவராக உள்ளார். பெரியகுளத்தில் வசிக்கிறார்.
இவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஓ.ராஜா தனியார் மருத்துவமனையில்தான் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்த விவரம் தெரியவில்லை என்றனர்.