

சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர், கோவில்பட்டி கிளை சிறையில் மர்மமான முறையில் இறந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் மனுத் தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் கூறுகையில், ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றுவது அரசின் கொள்கை முடிவு. அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டியதில்லை. வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்தால் மாற்றுங்கள்.
விசாரணையை நாங்கள் கண்காணிக்கிறோம். விசாரணைக்கு போலீஸார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிகிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றனர்.