

வேலூர் மாவட்டத்தில் நேற்றுஒரே நாளில் 129 பேருக்குகரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 3 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட129 பேருக்கும்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,381 ஆகவும் ராணிப்பேட்டையில் 761 ஆகவும் அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,762 பேர்பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று மேலும் 41 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,803-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு மாவட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆரணியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கடைகள் மூடப்படும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.