தென்காசி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு: திமுக மாவட்ட பொறுப்பாளர் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு: திமுக மாவட்ட பொறுப்பாளர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் 61 குளங்களில் குடிமராமத்து செய்வதற்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் 61 குளங்களில் குடிமராமத்து செய்வதற்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது.

மொத்த தொகையில் 10 சதவீதம் மட்டுமே குளங்கள் பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதி 90 சதவீத தொகை பல்வேறு மட்டங்களில் கமிஷனாக செல்வதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எந்தெந்த குளங்களில் குடிமராமத்துப் பணிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்பே அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால், இதுவரை அந்த பட்டியலை கொடுக்கவில்லை.

எனவே, திமுக சட்டப் பாதுகாப்புக் குழுவினருடன் சென்று பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டோம்.

ஆனால், இன்னும் எங்களுக்கு பட்டியல் வரவில்லை. குடிமராமத்துப் பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக உரிய ஆதாரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in