

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஐஓபி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த வங்கி மூடப்பட்டது. இந்த வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று 744 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில் இன்று மேலும் 43 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 27 பேருக்கும், களக்காட்டில் 2, மானூர், பாளையங்கோட்டை தாலுகா பகுதிகளில் தலா 5 பேரும், நாங்குநேரியில் 3 பேர், வள்ளியூரில் ஒருவர் என்று 43 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.
பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, அங்கு புறநோயாளிகளுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது.