குழித்துறையில் தனிமனித இடைவெளியின்றி ஆர்ப்பாட்டம்: காங் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது

குழித்துறையில் தனிமனித இடைவெளியின்றி ஆர்ப்பாட்டம்: காங் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தனிமனித இடைவெளியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் உட்பட 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.

குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் காரை கயிறு கட்டி இழுத்து சென்றனர். குழித்துறை தபால் நிலையம் முன்பு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை விஜயதரணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தனிமனித இடைவெளியின்றி கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீஸார், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார் உட்பட 135 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in