

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.எல்.ஏ. குடும்பத்தினர் 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் பொறுப்பு வகித்து வருகிறார். தொகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கரோனா தொற்று காரணமாக பலியானார். கள்ளக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தான், செய்யூர் திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
தற்போது ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.,வின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ., தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.