

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விநாயகர் சதுர்த்தி பண்டி கையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மலர் அங்காடி பின்புறம் செப்டம்பர் 14 முதல் 18-ம் தேதி வரை பண்டிகை பொருட்களான பொரி, கரும்பு, பூசணிக்காய், மாவிலை தோரணம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு சந்தை திறக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு சந்தைக்கு வரும் வாகனங்களிடமிருந்து நுழைவுக் கட்டணம், பொருட் களை வியாபாரம் செய்பவதற் கான கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும் பணிக்கான ஏலம், செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணிக்கு, கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பு வோர் மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகத்தில் வைப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். குறைந்த பட்ச ஏலத்தொகை ரூ.62 ஆயி ரத்து 650. அதிகபட்சம் ஏலம் எடுத்த நபர், ஏலத்தொகையுடன் உரிய வரிகள் சேர்த்து முழுவது மாக செப்டம்பர் 10-ம் தேதி காலை 11 மணிக்குள் அலுவலகத் தில் செலுத்த வேண்டும்.
பண்டிகைக் கால பொருட் களை விற்பனை செய்வோர் ஏலதாரரிடம் தினந்தோறும் அனு மதி சீட்டு பெற வேண்டும். அனுமதி சீட்டு 24 மணி நேரத் துக்கு மட்டுமே செல்லத்தக்கது. அனுமதிச் சீட்டு இன்றி வியாபாரம் செய்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.