

பாரிமுனையில் வியாபாரி மீது வழிப்பறி கும்பல் தாக்குதல் நடத்தியது குறித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவமனை அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூன்று சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து வழிமறித்த 6 இளைஞர்கள், திடீரென அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
கத்தி முனையில் வழிப்பறி
பின்னர், கத்தி முனையில் அவரை மிரட்டி வழிப்பறி செய்து தப்பினர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் தெளிவாக பதிவாகி உள்ளது. தாக்கப்பட்டது யார்? தாக்கியது யார்? எதற்காக தாக்குதல் நடந்தது என பூக்கடை காவல்நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.