

போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் இன்றி வழங்கக் கோரி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஜூலை 1-ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்படும் எனமத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாதத்துக்கான சம்பளத்தில் எவ்விதப் பிடித்தமும் இன்றி வழங்கக் கோரி ஜூலை 1-ம் தேதி போக்குவரத்து பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்’’ என்றார்.