கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் அனைத்து துறைகளின் பங்களிப்பும் அவசியம்: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் விளக்கம்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நுண் அளவில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கு  சென்னை மடிப்பாக்கத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். படம்: எம்.முத்துகணேஷ்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நுண் அளவில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கு சென்னை மடிப்பாக்கத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தடுப்பு பணியில் அனைத்து துறைகளின்பங்களிப்பும் அவசியம். அதனால்தான் ஆசிரியர்களும் களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் கரோனா வைரஸ் பரவலைத்தடுக்க நுண் அளவில் அமைக்கப்பட்ட குழுக்களின் நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 3 ஆயிரத்து 500 ஆசிரியர்கள்பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இளம் மற்றும் ஆரோக்கியமான 1,000 ஆசிரியர்கள் கரோனாதடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினருக்கு, மண்டல அளவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில், தொலைபேசி மூலமாக புதிய நோயாளியுடன் தொடர்பில் இருந்தவரை விசாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் அலுவலக சூழல் பணிதான்.

மற்றவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வார்டுகள் அளவில் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ்பரவல் தடுப்புப் பணி என்பது துறைபேதமின்றி அனைத்து துறையும் ஒன்று சேர்ந்து செய்யக்கூடியது. அதனால் கரோனா பரவல் தடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கோ.பிரகாஷ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in