Published : 28 Jun 2020 09:15 PM
Last Updated : 28 Jun 2020 09:15 PM

தென் காசியில் ஆட்டோ ஓட்டுநர் போலீஸ் விசாரணையில் மரணம்: ஒரே வாரத்தில் நான்காவது மரணம்:  முதல்வர் என்ன செய்கிறார்?-ஸ்டாலின் கேள்வி

சாத்தான்குளம் மரணத்தை அடுத்து போலீஸ் பிரச்சினையால் தென்காசியில் 4 வது மரணமாக ஆட்டோ ஓட்டுநர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். முதல்வர் நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு என்ன செய்கிறார் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்தும், சாத்தான் குளம் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு:

“பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் #JayarajandBennix வழக்கை முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?

— M.K.Stalin (@mkstalin) June 28, 2020

இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்”.

தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் நான்காவது மரணம். நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதல்வர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x