முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் முதல்வர் உட்பட 74 பேருக்கு கரோனா பரிசோதனை

முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் முதல்வர் உட்பட 74 பேருக்கு கரோனா பரிசோதனை
Updated on
1 min read

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் இன்று மாலை முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீடு, அலுவலகத்தில் பணிபுரிவோர், பாதுகாவலில் ஈடுபடும் போலீஸார் 74 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் கரோனா தொற்றால் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முதல்வர் அலுவலகம் மூடப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர் வசிக்கும் உருளையன்பேட்டை கண்ணகி தெரு பகுதியும் சீல் வைக்கப்ட்டுள்ளது.

பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் தனிமைப்படுத்திக்கொள்ள முதல்வர் நாராயணசாமிக்கும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இச்சூழலில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை முழுக்க மூடப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீடு, அலுவலகத்தில் பணிபுரியும் 74 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய உமிழ் நீர் மாதிரி எடுக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு அவரது வீட்டிலும் அவரது வீடு, அவரது அலுவலகத்தில் பணிபுரிவோர் தொடங்கி பாதுகாப்பு போலீஸ் படையினர் கோரிமேட்டிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நடந்தது.

மேலும் முதல்வர் வீட்டில் பணிபுரிவோருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டது. முதல்வர் மற்றும் அவரை சார்ந்தோருக்கான பரிசோதனைகள் ரகசியமாக சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in