Published : 30 Sep 2015 08:52 AM
Last Updated : 30 Sep 2015 08:52 AM

அட்டாக் பாண்டி சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவர தனிப்படை தீவிரம்: கூடுதல் எஸ்பி குமாரவேல் மூலம் விசாரிக்க முடிவு?

மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இவரது மகன் துரை தயாநிதி ஆகி யோரை சந்தித்தபோது அட்டாக் பாண்டி பேசியதில் நடந்த உண் மையை வெளிக்கொண்டு வர கூடுதல் எஸ்பி குமாரவேல் மூலம் விசாரணை நடத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அட்டாக் பாண்டியிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ள னர். தன்னை அரசியலைவிட்டே ஓடச்செய்ய திட்டமிட்டதால் பொட்டு சுரேஷை கொன்றதாக அட்டாக் பாண்டி 18 பக்கங்களில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

முதலில் இக்கொலையை அட்டாக் பாண்டி ஒப்புக்கொள்ளவே இல்லை என போலீஸார் தெரிவித்திருந்தனர். தற்போது ஒப்புக்கொண்டு விட்ட தாகவும், அட்டாக் பாண்டி கூறுவது உண்மையா என விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இது குறித்து தனிப்படையினர் தரப்பில் கூறப்படுவதாவது: கொலைக்கு ஒரு மாதத்துக்கு முன் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியை அட்டாக் பாண்டி சந்தித்துள்ளார். அப்போது அவர் என்ன பேசினார் என்பது குறித்த முழு தகவல்களையும் வெளியிடவில்லை.

அட்டாக் பாண்டிக்கு பின்னணியில் இக்கொலையில் யாரும் செயல் பட்டுள்ளனரா, பொட்டு சுரேஷ் வேறு யாருக்கும் இடையூறாக இருந் ததால், அட்டாக் பாண்டி மூலம் இக்கொலை நடந்துள்ளதா என பல சந்தேகங்களுக்கு விடை காண வேண்டியுள்ளது.

இதற்கு திமுக ஆட்சியின்போது அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலருடன் தொடர்புடைய ரவுடிகள், அட்டாக் பாண்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திமுகவின் முக்கிய நிர்வாகிகள், ஏற்கெனவே பொட்டு சுரேஷை 2 முறை கொலை செய்ய நடந்த முயற்சியின் பின்னணியில் உள்ளவர்கள், தற்போது அட்டாக் பாண்டிக்கு பண உதவி செய்தவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். இது வரை அட்டாக் பாண்டி கூறியவை மட்டுமே வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அது உண்மையா என்பதை சரிபார்க்கும் அளவுக்கு மதுரையில் நடந்த சம்பவங்களை முழுமையாக அறிந்த தகுதியான காவல்துறை அதிகாரிகள் யாரும் தற்போது மதுரையில் இல்லை. திமுக ஆட்சியில் அழகிரி குடும்பத்தினர், பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உட்பட கட்சியினரின் நடவடிக்கை களை முழுமையாக அறிந்தவர் அப்போதைய உதவி ஆணையர் குமாரவேல். தற்போது கூடுதல் எஸ்பியாக திருநெல்வேலி குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்று கிறார். இவர் அழகிரி குடும்பத் தினருக்கு பாதுகாப்பளிக்கும் பணியையும் மேற்கொண்டார்.

பரபரப்பு தகவல் வெளியாகலாம்

மதுரையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவமும், விசாரணை திறமையையும் பெற்ற வர். இதனால் அவரை வைத்து அட்டாக் பாண்டியிடமும், மேலும் சந்தேகத்துக்குரிய சிலரிடமும் விசாரணை நடத்தினால் உண்மையை வெளிக்கொண்டு வரலாம். குற்ற வாளிகளால் மறைத்து பேச முடி யாத நிலையை ஏற்படுத்தலாம் என நம்புகிறோம்.

உயர் அதிகாரிகள் ஆலோச னைக்குப் பின் இது குறித்து முடிவு எடுக்கப்படும். 2 நாள் காவலில் உள்ள அட்டாக் பாண்டியிடம் குமாரவேல் விசாரித்தால் இவ்வழக்கில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம். இவ்வாறு தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x