Published : 28 Jun 2020 08:28 AM
Last Updated : 28 Jun 2020 08:28 AM

காட்டுப்பன்றி வேட்டைக்காக தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்: ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்

வெடிவிபத்து ஏற்பட்டு தரைமட்டமான பகுதியை பார்வையிட்ட ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன், டிஎஸ்பி பூரணி ஆகியோர்.

வாலாஜா

வாலாஜா அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; 6 பேர் படுகாயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள நரிக் குறவர் குடியிருப்புப் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி அருகில் உள்ள வனப்பகுதிக்கு வேட்டைக்காக செல்வார்கள்.

இங்குள்ள தமிழன் என்பவரது வீட்டில் உழைப்பாளி, தமிழன், விஜய், சின்னதம்பி மற்றும் இவரது மனைவி வேதவள்ளி, எஜமான் மற்றும் இவரது மனைவி நந்தினி ஆகியோர் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, திடீரென அது வெடித்ததில் அந்த வீடு முழுவதும் தரைமட்டமானது. அங்கிருந்த அனைவரும் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.

அனைவரும் மீட்கப்பட்டுவாலாஜா அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், உழைப்பாளி(27) என்பவர்மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், டிஎஸ்பி பூரணிமற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்துவெடிகுண்டு தயாரிக்க பயன் படுத்தப்பட்ட மூலப் பொருட்களை தடய அறிவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x