புதுச்சேரியில் தொற்று பரவ காரணமான முகக்கவசம் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் தொற்று பரவ காரணமான முகக்கவசம் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவக் காரணமான முகக்கவசம் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், தொடர்புடைய முகக்கவசம் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உழவர்கரை வட்டாட்சியர் குமரன், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், முகக்கவசம் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சமீர் கம்ரா, சென்னை கல்பாக்கத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் பிரகாஷ், கண்ணபிரான், ராஜேஷ் ஆகியோர் மீது அரசின் உத்தரவை மீறுதல், நோய்த் தொற்றை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனிமனித இடைவெளி அவசியம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகளில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்று வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in