கரோனாவால் சிவகங்கையில் இருவர் மரணம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

கரோனாவால் சிவகங்கையில் இருவர் மரணம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனாவால் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மரணமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் வெளிபட்டணத்தைச் சேர்ந்த 58 வயது ஆண், பாண்டுகுடியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஆகிய இருவர் மரணமடைந்தனர்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் சருகணி, பீர்கலைக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in