Last Updated : 27 Jun, 2020 04:41 PM

 

Published : 27 Jun 2020 04:41 PM
Last Updated : 27 Jun 2020 04:41 PM

நெல்லையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 737 ஆக உயர்வு: மேலும் ஒருவர் மரணம்

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 737 ஆக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்பு அலுவலர் அபூர்வா மற்றும் ஆட்சியர் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 202 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு இதுவரை 11,500 பேர் சாலை மார்க்கத்தில் வந்துள்ளனர். 1800 பேர் ரயில் மூலம் வந்துள்ளனர்.

மாவட்டத்தில் கரோனா தொற்று சிகிச்சைக்காக 1100 படுக்கை வசதிகள் உள்ளன. 600 படுக்கைகள் ஆக்ஸிஜன் செலுத்தும் வசதியுடனும், 72 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடனும் உள்ளன என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 65 வயது பெண் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலை பாப்புரல் பிரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள் பெற்று, உலக சுகாதாரநிறுவன வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நல்லடக்கம் செய்தனர். இதனால் திருநெல்வேலியில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x