பொய்யின் மறுபெயர் ஸ்டாலின் என்று மக்களே பெயர் சூட்டுவார்கள்: அமைச்சர் உதயகுமார் சாடல்

பொய்யின் மறுபெயர் ஸ்டாலின் என்று மக்களே பெயர் சூட்டுவார்கள்: அமைச்சர் உதயகுமார் சாடல்
Updated on
2 min read

தமிழக முதல்வருக்குப் பெருகும் மக்கள் செல்வாக்கை பொறுக்க இயலாமல், பொய்யான அறிக்கைகளை வெளியிடும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்களே 'பொய்யின் மறுபெயர் ஸ்டாலின்' என்று பெயர் சூட்டி விடுவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் கழக அம்மா பேரவையின் சார்பில் 5 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

திருமங்கலம் தொகுதி T.கல்லுப்பட்டி ஒன்றியம் காடனேரி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, அமைச்சர் உதயகுமார் இன்று கபசர குடிநீர் பொடி பாக்கெட், முகக்கவசம், ரஸ்க் பாக்கெட் வழங்கினார்.

உடன் ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்டஇலக்கிய அணி செயலாளர் திருப்பதி உள்பட கழக நிர்வாகிகளும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதியழழகன், காவல்துறை ஆய்வாளர் துரைபாண்டி, உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உதயகுமார் பேசியதாவது;

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களைக் காக்கும் வண்ணம் முதல்வர் பல்வேறு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாது இரவு பகல் பாராது ஊண், உறக்கமின்றி தமிழக மக்களைத் தொடர்ந்து முதல்வர் கண்காணித்து தீர்க்கதரிசனமாக பல்வேறு முடிவுகளை முதல்வர் எடுத்து வருவதால் இந்த நோயால் குணம் அடைந்துவர்களும் தமிழகத்தில் தான் அதிகம், அதேபோல் இந்த நோயால் இறப்பு சதவீதமும் தமிழகத்தில் தான் குறைவு.

இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் மக்களைப் பற்றி கவலைப்படாமல் எப்படியாவது அரசு மீது பழி சுமத்த வேண்டும் என்று இந்த கொரோனா காலத்திலும் அரசியல் செய்ய நினைக்கின்றனர் ஆனால் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி பலிக்கவில்லை, ஏனென்றால் இன்றைக்கு கரோனா காலத்திலும் தன்னைப் பற்றி கூட கவலைப்படாமல் முதல்வர் மக்களைக் காப்பதில் முதன்மையாக இருக்கிறார் என்று இன்றைக்கு மக்களே பாராட்டி வருகின்றனர்

அதுமட்டுமல்லாது முதல்வர் திருச்சிக்கு சென்று சென்று திரும்பி வரும்போது அப்போது அங்கிருந்த மக்களிடம் நேரடியாகச் சென்று நீங்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று அறிவுரை வழங்கி இதன் மூலம் கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் பாதுகாப்புக் கவசமாக முதல்வர் திகழ்ந்து வருகிறார்

அதனால்தான் இன்றைக்கு மக்கள் சக்தி பெற்ற தலைவராக முதல்வரும், துணை முதல்வர் இருந்து வருகின்றனர் இதை பொறுத்துக்கொள்ள ஸ்டாலின் இப்படியே சென்றால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள் என்று தினம் தினம் பொய்யான அறிக்கையை கூறிவருகிறார். இப்படியே சென்றால் பொய்யின் மறுபெயர் ஸ்டாலின் என்று மக்களே சூட்டி விடுவார்கள்

இன்றைக்குக் கூட முதல்வர் மற்றும் துணை துணை முதல்வர் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இதுவரை 5 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

இதில் காவல்துறை, வருவாய், உள்ளாட்சி, சுகாதாரம், மாநகராட்சி இப்படி அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in