

‘ஒன்றிணைவோம் வா’ திட் டத்தை முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்துவதாக மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:
கரோனாவால் எம்எல்ஏ ஒருவரை திமுக பலி கொடுத்து விட்டதாக முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார். அடிமட்ட மக்க ளுக்கு அடிப்படைத் தேவைகளை அவர்கள் இல்லம் தேடிச் சென்று வழங்க உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம். இப்படிப்பட்ட திட்டத்தை முதல்வர் கொச்சைப் படுத்தியுள்ளார். இத்திட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல், முதல்வர் இப்படி பேசியிருக்கிறார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசு செய்ய வேண் டிய பணிகளை திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் செய்து வருகின்றனர்.எங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ள திமுக தலைவர் இருக்கிறார். எனவே, இதுபற்றி பேசிக் கொண் டிருக்காமல் கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ளுங்கள். திமுக தலை வரைப் பற்றி பேச இது நேரம் அல்ல. இது சட்டப்பேரவையும் அல்ல. முதல்வருக்கான பணி களை நீங்கள் பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க் கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.