

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது.
நேற்று வரை மாவட்டத்தில் 474 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 156 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர், 314 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 4 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. இதில் 162 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். மீதி 380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், உயிரிழப்பு 4 பேர் என தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.