

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கள் வர காரணமான முதல்வர் ஜெயலலிதா வுக்கு பாராட்டு தெரிவித்து பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று இதற்கான தனி தீர்மானத்தை கொண்டு வந்து பேரவை முன்னவரும், நிதி அமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலை களில் 20 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண் ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குறு,சிறு, நடுத்தர தொழில் துறையிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
கடந்த 1991-ல் அதிமுக அரசு பொறுப் பேற்றபோது தமிழகத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட குறை வாக இருந்தது. ஆனால், இப்போது தேசிய சராசரியைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை கள், ஏற்றுமதியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு, மின் சாரம், சாலை வசதி, சுகாதாரம், தனி நபர் வருமானம், ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய 9 பிரிவுகளில் 8-ல் தமிழகம் சிறப்பாக உள்ளதாக அசோசாம் தனது ஒப்பீட்டு அறிக்கையில் தெரிவித்துள் ளது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தொழிற்கொள்கையால் தமிழகத்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டுள்ளது.
மின் தட்டுப்பாட்டைப் போக்கி மின் உற்பத்தியிலும் தமிழகம் சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் மொத்த வளர்ச்சி விகிதம் 4.74 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் மொத்த வளர்ச்சி விகிதம் 7.24 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணமான முதல்வர் ஜெயலலிதாவை பாரட்டி தமிழக அரசின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தீர்மான விவரம்
கடந்த 9, 10 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்கை தாண்டி ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. இதன்மூலம் 4.70 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்விலும், தமிழக பொருளாதாரத்திலும் அதன் மூலம் இந்திய பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட முதல்வர் ஜெயலலிதா வழி வகுத்துள்ளார். எனவே, அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து பெருமிதம் கொள்வதோடு இதுபோன்ற சாதனைகள் தொடர வேண் டும் என பேரவை வாழ்த்தி மகிழ்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது. பின்னர் குரல் வாக் கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.