

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 29 பேர் குணமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சிவகங்கை, தேவகோட்டை, கொந்தகை, மாரநாடு, மானாமதுரை, ஆவரங்காடு, மழவராயனேந்தல், கருத்தம்பட்டி, குண்டேந்தல்பட்டி, கள்ளிக்குடி, சாலூர், புலிக்கண்மாய், சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இன்று மட்டும் ஒரே நாளில் 29 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.
மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமது ரபீக் ஆகியோர் பங்கேற்றனர்.