

கைதிகளை விசாரிக்கும்போது எச்சரிக்கை தேவை என்றுஅனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி ஜே.கே.திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலை தடுக்ககைது செய்யப்படும் நபர்களைநேரடியாக காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லாமல், தனியாக பிரித்து வைக்க காலியானகட்டிடங்களை தேர்வு செய்து,அதில் அடைத்து வைக்க வேண்டும். அவ்வாறு காலியானகட்டிடங்கள் கிடைக்கவில்லைஎன்றால் உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பி அலுவலகங்களை பயன்படுத்தலாம். இவ்வாறு உருவாக்கப்படும் கட்டிடங்களில் தற்காலிகமாக கைதிகளை அடைத்து வைக்கலாம்.
கரோனா பரிசோதனை
பிணையில் செல்லக்கூடிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக பிணையில் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுடன் எந்தவித நேரடி தொடர்பும் காவலர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது அதேபோல பிணையில் செல்ல முடியாத குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யகுறைந்த அளவிலான காவலர்களை பயன்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது போல் கைது செய்யப்பட்ட பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதோடு கூடுதலாக கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
ஒருவேளை கைது செய்யப்பட்ட நபருக்கு கரோனா தொற்று உறுதியானால் கைது செய்யும் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும். எனவே, இதுபோன்ற கைதுகளில் குறைந்த அளவிலான காவலர்களை பயன்படுத்த வேண்டும்.
குற்றம் சாட்டபட்ட நபர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டால், அந்த நபரை அருகில் உள்ள சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும். விசாரணைக் கைதிகளை விசாரிக்கும்போது சட்ட விதிகளின்படி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.