

சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்றுஆய்வு செய்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் 19,597தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய காலை,மதிய வேளையில் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாககபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கால முறையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது.
மாநகராட்சியில் இதுவரை 340 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களில் 120 பேர்பாதிக்கப்பட்டு, பலர் குணமடைந்துள்ளனர். பணியாளர்களுக்கு தினமும் ஒரு முகக் கவசம், வாரம் ஒரு கையுறை வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.