Published : 25 Jun 2020 06:42 PM
Last Updated : 25 Jun 2020 06:42 PM

கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட சோதனைச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி: 50 வயதுக்கு மேற்பட்டோரை விடுவிக்க வலியுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள காவல்சோதனைச்சாவடிகளில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அரசு அறிவித்தது.

இதில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து, மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.

ஆனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் சில கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.

இதில், மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் இருசக்கர வாகனங்கள், கார், வேன் செல்ல கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முதல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் விதமாக பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 ஷிப்ட்கள் பணியாற்ற உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை கூறும்போது, கரோனா தடுப்பு பணியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை பயன்படுத்த வேண்டாம் என ஏற்னெவே அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், அது ஆசிரியர்கள் நியமனத்தில் கடைபிடிக்கப்படவில்லை. அதே போல், விருப்பம் தெரித்தவர்கள் மட்டுமே காவல் சோதனைச்சாவடியில் பணி வழங்க வேண்டும். இதில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்த கூடாது.

தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உடற்கல்வி ஆசிரியர்களை மட்டும் தான் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த மாவட்டங்களில் அனைத்து ஆசிரியர்களை கலந்து பணி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் நாட்டு நலப்பணித்திட்டம், என்.சி.சி., ஜே.ஆர்.சி., சாரணர் இயக்கம் உள்ளிட்ட சேவை அமைப்பில் சுமார் 6 ஆசிரியர்களை வரை உள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செயல்படுவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டிருக்கும். அவர்களை பயன்படுத்தினாலே போதும், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x