புதிய குடிநீர் திட்டங்களுக்கு இந்த ஆண்டு 9 மாவட்டங்களில் ஆய்வு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு

புதிய குடிநீர் திட்டங்களுக்கு இந்த ஆண்டு 9 மாவட்டங்களில் ஆய்வு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு
Updated on
1 min read

கோவை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, ஈரோடு உள் ளிட்ட 9 மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாத முடிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலுரையில் பேசியதாவது:

ஆற்காடு, காரைக்குடி உள்ளிட்ட 5 நகராட்சிகள், இருகூர், பர்கூர், தேவாரம் உள்ளிட்ட 5 பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.8 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும்.

31 மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சி களில் உள்ள கழிப்பிடங் களில் ரூ.3.88 கோடியில் உயிரி செரிமான கொள்கலன்கள் நிறுவி, சமுதாய சமையற் கூடங்கள், தெருவிளக்கு களை எரியச் செய்ய பயன் படுத்தப்படும்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.9.44 கோடியில். ஒருவருக்கு 50 சதுரடி அளவில் நகர்ப்புற ஏழைகளுக்கு உறைவிட திட்டத்தின் கீழ் 38 தங்கும் இடங்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காரைக்குடி, ராமநாத புரம், புதுக்கோட்டை, பெரம் பலூர் நகராட்சிகளில் 15 நீர்நிலைகள் ரூ.6.14 கோடியில் புனரமைக்கப்படும்.

நாமக்கல், கோவை, திருவண்ணாமலை, திருநெல் வேலி, ஈரோடு,திருப்பூர், விழுப் புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள், திண்டுக்கல், தேனியி்ல் 2 நகர குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in