Published : 14 Sep 2015 11:24 AM
Last Updated : 14 Sep 2015 11:24 AM

நூல்களை மொழிபெயர்ப்பது மிகவும் சவாலானது: ‘இந்து’ என்.ராம் கருத்து

நூல்களை மொழிபெயர்ப்பது மிகவும் சவாலானது என்று ‘இந்து’ என்.ராம் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதிய சிறுகதைகளை ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ‘சீயிங் இன் தி டார்க்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த ஆங்கில நூலின் வெளியீட்டு விழா, ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பில் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.

நூலை கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ‘இந்து’ என்.ராம் வெளியிட, டாக்டர் கே.சுப்பிரமணியன், சத்யா மகேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் என்.ராம் பேசிய தாவது: பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதிய சிறுகதைகளில் 25 கதைகள் தேர்வு செய்யப்பட்டு, அவை ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதைகளின் தேர்வும், ஆங்கில மொழிபெயர்ப்பும் சிறப் பாக உள்ளது. அதற்காக பிரபா தேவனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சவாலானது. அமெரிக்க, ரஷ்ய எழுத்தாளர்களின் மொழி பெயர்ப்பு நூல்களை படித்திருக் கிறேன்.

மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைகளை மட்டும் மொழி பெயர்ப்பது அல்ல. நூலின் பொருளை மொழிபெயர்க்க வேண்டும்.

வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்த்தால், பொருள் மாறிவிடும் ஆபத்து உள்ளது. மூலநூல் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறாரோ, அந்த பொருள் சிதையாமல் மொழி பெயர்ப்பது மிகச்சிறந்த கலையாகும். அதை பிரபா ஸ்ரீதேவன் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.

சூடாமணியின் சிறுகதைகள், சமுதாயத்தை அப்படியே பிரதி பலிக்கின்றன. அந்த பிரதி பலிப்பை ஆங்கில மொழி பெயர்ப்பிலும் நன்றாக உணர முடிகிறது. தொடர்ந்து இலக்கியப் பணியிலும், சமூகப் பணியிலும் ஈடுபட்டு வரும் ஆர்.சூடாமணி அறக்கட்டளைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஏற்புரையாற்றிய நீதிபதி பிரபா தேவன், தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முன்னாள் தலைவர் சி.டி.இந்திரா, எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியீட்டாளர் மினி கிருஷ்ணன், ஆர்.சூடாமணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கே.பாரதி ஆகி யோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x