குமரியில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா: தொற்று எண்ணிக்கை 250-ஐ தாண்டியது

குமரியில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா: தொற்று எண்ணிக்கை 250-ஐ தாண்டியது
Updated on
1 min read

சென்னை, மற்றும் வெளிநாடு, வெளியூர்களில் இருந்து அதிகமானோர் தினமும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர.

கன்னியாகுமரியைச் சேர்ந்த எஸ்.ஐ. மதுரையில் வேலை பார்த்து வந்தார். அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது கரோனா பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஏற்கெனவே மருங்கூர் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த மருத்துவர் நாகர்கோவிலுக்கு வந்தபோது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தக்கலையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளது. குறிப்பாக தூத்தூர் மற்றும் சுற்றுப்புற மீனவ கிராமங்களில் கரோனா தொற்று அதிகரித்திருப்பதை தொடர்ந்து அங்கிருந்து மக்கள வெளியே செல்லவும், வெளியிலிருந்து மக்கள் தூத்தூர் பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in