

தமிழகம் முழுவதிலும் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், சளி, காய்ச்சல் வராமல் தற்காத்துக் கொள்ளவும் மக்கள் பலவித வீட்டு வைத்தியங்களை பின்பற்றி வரும் நிலையில் கபசுர குடிநீர், ஆர்சனிகம் ஆல்பம்-30 ஆகிய மருந்துகளை உட்கொள்ள அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், முடிச்சூர் கிராம குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து கபசுர குடிநீர் பொடியை வீடு தேடிச் சென்றுஇலவசமாக வழங்கினர். மேலும்மீண்டும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களும் வழங்கப்பட்டன. கிராமத்தினர் அடங்கிய வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ அறிவுரைகள், உணவு முறை மாற்றங்கள்,வீடுகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த ஆலோசனைகளைதினமும் வழங்கி வருகின்றனர்.கூட்டமைப்பின் இந்த செயலைகிராம மக்கள் அனை வரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
கூட்டமைப்பின் காப்பாளர் தாமோதரன் கூறியதாவது: எங்கள்பகுதியில் மொத்தம், 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள தடுப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டியதேவை தற்போது உருவாகியுள்ளது. ஆனால் எந்த மருந்து, எங்குகிடைக்கும் போன்ற தகவல்கள்பெரும்பாலோருக்கு தெரியவில்லை.
எனவே என் சொந்த செலவிலும், கூட்டமைப்பு சார்பிலும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாகக் கொடுக்க ஆசைப்பட்டோம். மற்றநிர்வாகிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். முதல் கட்டமாக, 11,500 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர், ஆர்சனிகம் ஆல்பம்-30 மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்துக்குள் அனைத்து குடும்பத்தினருக்கும் மருந்துகள் வழங்க முடிவு செய்துள்ளோம். மேலும், முகக்கவசம் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முடிச்சூர் கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாதஊதியம் நிவாரணப் பொருட்களையும் வழங்கினோம் என்றார்.