

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:
பழனி சார்-ஆட்சியர் எஸ்.உமா இடமாற்றப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட இயக்குநர்மற்றும் கூடுதல் ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை சார்-ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்சன் புஷ்பராஜ்மாற்றப்பட்டு சுகாதாரத் துறைஇணை செயலராகவும், சென்னை பெருநகர மாநகராட்சிகல்விப் பிரிவு துணை ஆணையர்கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அயல்பணி முடித்து தமிழக பணிக்கு திரும்பியுள்ள சங்கர் லால் குமாவத், சென்னை மாநகராட்சி கல்விப் பிரிவு துணைஆணையராகவும், பொதுத் துறை துணைச் செயலராக இருந்து விடுப்பில் சென்று திரும்பிய ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.