கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் உத்தரவு

கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் உத்தரவு
Updated on
1 min read

மாவட்டங்களில் கரோனா பர வலை கட்டுப்படுத்த கண் காணிப்பை தீவிரப்படுத்தி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண் டும் என்று ஆட்சியர்களுக்கு தலை மைச் செயலர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யர்களுக்கு அவர் நேற்று எழு திய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில், வெளிமாநிலத் தில் இருந்து வந்தவர்கள், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங் களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், அருகில் உள்ள மண்டல பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த தொற்று பரவல் கண்டறியப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர்கள் அதிக விழிப்புடன் இருந்து கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அந்த தெருக்கள் முழுமை யாக பரிசோதிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டத்துக்கு அதிக கட்டுப்பாடு கள் விதிக்க வேண்டும். கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தெரு அல்லது உள்ளூர் பகுதியில், காய்ச் சல் பாதிப்பு அதிகளவில் இருந்தால் 100 சதவீதம் பரிசோதனை செய் யப்பட வேண்டும். மக்கள் நெருக் கடியுள்ள பகுதியில் வசிக்கும் அபாயகரமான நிலையில் உள்ள குடும்பங்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு மாற்ற வேண்டும்.

தொடர்பு கண்டறிதல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதி மற்றும் தனிமைப்படுத்தல் லேமாண்மை ஆகியவையே நோயைக் கட்டுப் படுத்துவதற்கான முக்கியமான செயல்பாடாகும்.

முகக்கவசம் அணிவது கட் டாயம் என்பதால் விதிமீறல் களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஒரு நோய்க்கட்டுப் பாட்டு பகுதியில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கரோனா நோயாளி கள் இருந்தால், அப்பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு, தன்னார்வலர்கள் மூலம் அப்பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு தேவையான அத்தியாவ சியப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையி லும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தாம தமில்லாமல் அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ் வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in